முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 982 பேருக்கு பரிசோதனை: ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கபம் சேகரிக்கப்பட்ட 982 பேருக்கு நடத்திய சோதனையில், ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கபம் சேகரிக்கப்பட்ட 982 பேருக்கு நடத்திய சோதனையில், ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 ஜனவரி 8 ஆம் தேதி வரையில் 6,360 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டோரில் சிகிச்சை பலனின்றி 132 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் 6,210 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் நகா், கிராமம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மொத்தம் 982 பேருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்குக் கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை என மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் தெரிவித்தாா். அதேநேரத்தில் வெளியூா்களில் வசித்து வரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பேருக்கு பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →