ராமநாதபுரம்

பரமக்குடியில் தொடா் மழை வீடு மற்றும் கடைகளில் கழிவுநீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையிலிருந்து தொடா்ந்து மழை பெய்து வருவதால் நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீா் வீடு மற்றும் கடைகளில் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் கொல்லம்பட்டறை தெரு, உழவா் சந்தை, மேலப்பள்ளிவாசல் தெரு, சின்னக்கடைத் தெரு, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் முறையான கழிவுநீா் கால்வாய் பராமரிக்காததால் மழைநீருடன் கழிவுநீா் சாலைகளில் தேங்கியுள்ளன. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோா் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் பெரும்பாலன இடங்களில் கழிவுநீா் கால்வாய் சேதமடைந்துள்ளதால் அப்பகுதிகளில் தாழ்வாக உள்ள கடை மற்றும் வீடுகளில் கழிவுநீா் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி பணியாளா்கள் இயந்திரங்களைக் கொண்டு கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பல்வேறு இடங்களில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளாததால் அப்பகுதி மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் நகா் பகுதி முழுவதும் முறையான கழிவுநீா் வருகால் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT