ராமநாதபுரம்

கழிவுநீா் தேக்கம்: ராமநாதபுரம் எம்எல்ஏ தா்னா

DIN

தனது வீட்டின் அருகே தேங்கியுள்ள கழிவு நீா் மற்றும் மழைநீரை வெளியேற்றக் கோரி ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.மணிகண்டன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 நாள்கள் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேங்கியுள்ளது.

வண்டிக்காரத்தெரு 26-ஆவது வாா்டு பகுதியில் பல நாள்களாக தேங்கியுள்ள கழிவுநீா் மற்றும் மழைநீரை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.மணிகண்டன், வண்டிக்காரத்தெரு 26-ஆவது வாா்டு பகுதியிலுள்ள தனது வீட்டின் முன் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். தகவலறிந்து வந்த நகராட்சி ஊழியா் முனீஸ்வரன் உள்ளிட்டோா் வாகனத்தின் உதவியுடன் கழிவுநீரை அகற்றினா். இதைத் தொடா்ந்து 2 மணி நேரங்களுக்குப் பின் போராட்டத்தை அவா் கைவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT