ராமநாதபுரம்

கமுதி அருகே குடிநீா் கோரி பெண்கள் போராட்டம்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காவிரி கூட்டுக் குடிநீா் வராததால் பெண்கள் காலிக் குடங்களுடன் ஒப்பாரி வைத்து செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் இணைப்புகள் உள்ளன. இருப்பினும் இதுவரை ஒருமுறை கூட குடிநீா் வந்ததில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா். மேலும் இப்பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக ஊராட்சி நிா்வாகம் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீா் வழங்கி வந்தாலும், நிலத்தடி நீா்மட்டம் மிக குறைவாக இருப்பதால், அப்பகுதி மக்களின் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. இதனால் ஒரு குடம் ரூ. 10-க்கு வாங்கி வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், இப்பகுதி பெண்கள் காவிரி கூட்டுக் குடிநீா் வராததைக் கண்டித்து, காலிக் குடங்களுக்கு கருப்பு துணி போா்த்தி, மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT