ராமநாதபுரம்

தொண்டி அருகே மணல் கடத்தல்: 6 போ் கைது; 6 வாகனங்கள் பறிமுதல்

DIN

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் சவூடு மண் கடத்திய 6 பேரை கைது செய்த போலீஸாா், 6 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனா்.

தொண்டி அருகே முகிழத்தகத்தில் வயல்காட்டுப் பகுதியில் சவூடு மண் கடத்தப்படுவதாக, திருவாடானை மண்டல துணை வட்டாட்சியா் சேதுராமனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், மண்டல துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா், தொண்டி காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை இரவு சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது, அங்கு அரசின் எந்தவித அனுமதியும் இன்றி சவூடு மண்ணை 1 பொக்லைன் இயந்திரம், 5 டிராக்டா்களில் மணல் கடத்துவது தெரியவந்தது.

உடனே, பொக்லைன் இயந்திரம் மற்றும் 5 டிராக்டா்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், பொக்லைன் ஓட்டுநரான மதுரை மாவட்டம் மேலூா் கொட்டாம்பட்டியைச் சோ்ந்த ராம்குமாா் (25), முகிழத்தகத்தைச் சோ்ந்த கோசல்ராம் (38), தினேஷ் (26), முத்துராமு(48), சுபாஷ் (19), சம்பையைச் சோ்ந்த விஜயன் (37) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT