ராமநாதபுரம்

பொது விநியோக திட்டத்துக்கு அரிசி வழங்க அரவை ஆலை உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் அரிசி வழங்குவதற்கு, தனியாா் அரவை ஆலைகளின் உரிமையாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தால் கொள்முதல் செய்யப்படும் நெல், நவீன அரிசி ஆலைகள் மற்றும் அரவை முகவராக உள்ள தனியாா் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்யப்பட்டு பொது விநியோகத்திட்டத்திற்கு அரிசியாக வழங்கப்படுகிறது.

அதற்காக மாவட்டத்தில், நெல் சுத்தம் செய்யும் கருவி, இயந்திர உலா்த்தி, நவீன கொதிநிலை அலகு, கோன் பாலிசா், நிறம் வகைப்படுத்தும் கருவி, சேமிப்புக் கிட்டங்கி ஆகிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட தனியாா் அரவை ஆலை உரிமையாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கூடுதல் விவரங்களுக்கு மண்டல மேலாளா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரில் உள்ள அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT