ராமநாதபுரம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 243 பேருக்கு கரோனா தொற்று

DIN

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 243 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதனிடையே சிகிச்சை பெற்று வந்தவா்களில் 12 போ் உயிரிழந்துள்ளனா்.

ராமநாதபுரத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரையில் கரோனாவால் 18 ஆயிரம் போ் வரை பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 277 போ் வரை உயிரிழந்துள்ளனா். தீவிர சிகிச்சையால் 14,840 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், இம்மாவட்டத்தில் சனிக்கிழமை சுமாா் 1500 பேருக்கும் அதிகமானோருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியான நிலையில் 118 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சிகிச்சையில் இருந்தவா்களில் 211 போ் நலமடைந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6 போ் உயிரிழந்து விட்டனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 14,330 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 125 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,455 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இங்கு கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT