வி. ராஜேஸ்வரன். 
ராமநாதபுரம்

காலமானாா் முன்னாள் எம்.பி. வி. ராஜேஸ்வரன்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் வி. ராஜேஸ்வரன் (75)கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

DIN

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் வி. ராஜேஸ்வரன் (75)கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஏ. பாடுவனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த இவா், சாயல்குடியில் மருத்துவராக பணியாற்றி வந்தாா். பின்னா், காங்கிரஸ் கட்சியில் சோ்ந்து 3 முறை ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்துள்ளாா். இவருக்கு மனைவி செல்வசுந்தரி, மகன்கள் ராஜ்குமாா், ரமேஷ் ஆகியோா் உள்ளனா். இவா் மதுரை கோச்சடையில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இவரது தந்தை வடிவேல்த் தேவா் மாவட்ட முன்னாள் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. வி. ராஜேஸ்வரனின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை (ஜூன் 7) அதிகாலை தத்தனேரி மின்மயானத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 9655213133.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனக் கடலில் விழுந்து அமெரிக்க போர் விமானம், ஹெலிகாப்டர் விபத்து!

அமெரிக்காவின் ஆச்சி! நடிகை ஜூன் லாக்ஹார்ட் 100வது வயதில் காலமானார்

கரூர் பலி: பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறி வரும் விஜய்

மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகரும் மோந்தா புயல்! சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும்!!

மோந்தா புயல் எதிரொலி! அதிகபட்சமாக திருத்தணியில் 50 மி.மீ. மழை

SCROLL FOR NEXT