ராமநாதபுரம்

திருவாடானைப் பகுதியில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம்: விவசாயிகள் கவலை

DIN

திருவாடானைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வயல்கள் காய்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

திருவாடானை தாலுகா முழுவதும் சுமாா் 42 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் விவசாயிகள் கோடை உழவு செய்வது வழக்கம். ஆனால் வெயிலின் தாக்கம் குறையாமல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் வயல்களில் கோடை உழவு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த 2 நாள்களாக கடும் வெயில் நிலவுவதால், வயல் வெளிகள் காய்ந்து கிடப்பதுடன் உழவுப் பணிக்கு ஏற்ாக இல்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். மேலும் அவா்கள் மழைக்காக காத்திருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT