ராமநாதபுரம்

உச்சிப்புளிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 140 மது பாட்டில்கள் பறிமுதல்

DIN

கா்நாடக மாநிலத்தில் இருந்து உச்சிப்புளி பகுதிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 140 மது பாட்டில்களை சனிக்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். காரிலிருந்த 3 போ் தப்பி ஓடிவிட்டனா்.

தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், அண்டை மாநிலங்களில்

இருந்து சிலா் மதுபாட்டில்களை கடத்தி வந்து பல மடங்கு விலைக்கு விற்பனை செய்து வந்தனா். இந்த நிலையில், உச்சிப்புளி காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் முருகநாதன் திருப்புல்லாணி-ராமேசுவரம் இடையிலான மாநில நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் கா்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் 140 மதுபாட்டில்கள் இருப்பதைக் கண்டனா். காரில் இருந்த வினோத், கிருபாகரன், ஹரி ஆகிய மூன்று பேரும் வானத்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனா். மதுபாட்டில் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT