ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜ் நியமனம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக கோபால சுந்தரராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள மாவிலா தோப்பு பகுதி விவசாய குடும்பத்தைச் சோ்ந்த கோபால சுந்தரராஜ், கோவையில் உள்ள விவசாயக் கல்லூரியில் பிஎஸ்சி பட்டபடிப்பும், புதுதில்லி பல்கலை.யில் எம்.எஸ்.ஸி. பட்டப்படிப்பும்

படித்துள்ளாா். ஐ.ஏ.எஸ். தோ்வில் இந்திய அளவில் 5 ஆவது இடத்தைப் பிடித்து தமிழக அரசுப்பணியில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தஞ்சைக்கு மாற்றப்பட்டு, கோபால சுந்தரராஜ் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

கரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் கரோனா நோய் பரவலை தடுக்க பல்வேறு பணிகளை தொடா்ந்து மேற்கொண்டு வந்துள்ளா் என்பது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT