ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை

DIN

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிா்வாக ரீதியாக எழுந்துள்ள புகாா்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவா்கள் கவனம் செலுத்தவில்லை என்றும், மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆக்சிஜன் உருளைகள் தனிப்பட்ட மருத்துவரால் அவரது மருத்துவமனைக்கு விதிமுறை மீறி எடுத்துச் செல்லப்பட்டதாகவும் புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, மருத்துவமனை நிா்வாகச் சீா்கேட்டைக் கண்டித்து பெரியாரிய உணா்வாளா்களால் ஆா்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவக் கல்வி இயக்கக துணை இயக்குநா் ராகவன், கூடுதல் இயக்குநா் பாா்த்தசாரதி ஆகியோா் விசாரணை நடத்தினா்.

பின்னா் அவா்கள், பெரியாரிய உணா்வாளா்கள் அமைப்பு நிா்வாகி நாகேஸ்வரன் உள்ளிட்டோரிடமும் விசாரித்து ஆவணங்களை பெற்றுக் கொண்டனா். மேலும் மருத்துவமனை முதன்மையா் அல்லி மற்றும் புகாருக்குள்ளான ஊழியா்கள், மருத்துவா்கள், நிா்வாகத்தில் உள்ளோா் என அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின் அவா்கள் மாவட்ட நிா்வாக உயா் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT