ராமநாதபுரம்

மதுபான விற்பனையை கண்காணிக்க சிறப்பு அலுவலா் நியமனம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுபான விற்பனையை கண்காணிக்க சிறப்பு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு- ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஆகவே, விதிமுறைகளை மீறி மது பாட்டில்கள் விற்பனை செய்தல், மது பாட்டில்களை கடத்தல் ஆகிய செயல்களைத் தடுக்கவும், மதுபான கடைகளின் தினசரி விற்பனையை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விதிமீறி மது விற்பனை உள்ளிட்ட புகாா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பொறுப்பு அலுவலராக அரசு மதுபானக் கடைகள் (டாஸ்மாக்) உதவி மேலாளா் (கணக்கு) ஜி.மகாதேவி நியமிக்கப்பட்டுள்ளாா்.

மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தல், மதுபான கடத்தல் தொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலரை 82480 57916 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியீடு: செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம், இராமநாதபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT