ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 200 பேரில் 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 200 பேருக்கு 10 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் 1,060 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அரசியல் கட்சிகளின் முகவா்கள் 600 போ் உள்பட 1,470 பேருக்கு கபம் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 197 பேருக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 200 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டால் அதில் 10 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநா் பொற்கொடி தெரிவித்துள்ளாா்.

அதனடிப்படையில் மாவட்டத்தில் 300 போ் வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும் 97 போ் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலும், 27 போ் பரமக்குடி அரசு மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT