ராமநாதபுரம்

போக்குவரத்து ஊழியா் வீட்டில் 24 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருட்டு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறை ஊழியா் வீட்டில் 24 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.10 லட்சம் ரொக்கம் ஞாயிற்றுகிழமை திருடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் ஓம்சக்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (60). போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவா் தனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் ஞாயிற்றுக்கிழமை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தாா். அன்று முழுவதும் மருத்துவமனையில் இருந்த மாரியப்பன் திங்கள்கிழமை பகலில் வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது வீட்டின் பின்பக்கக் கதவு திறந்திருப்பது தெரியவந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 24 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.10 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த கேணிக்கரை போலீஸாா் விரைந்து வந்து விசாரித்தனா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்ன்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT