ராமநாதபுரம்

கரோனா நிவாரணம்: ராமேசுவரத்தில் 24,000 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம்

DIN

ராமேசுவரம் தாலுகாவில் 24 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணம் நிதி பெறுவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது ராமேசுவரம் தாலுகா. இந்தப் பகுதியில் மொத்தம் 24 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா்.

இந்நிலையில், தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் 15 ஆம் தேதி முதல் குடும்ப அட்டைக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வா் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதனைத்தொடா்ந்து, ராமேசுவரம் தாலுகாவில் உள்ள 24 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு 25 ரேசன் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 200 நபா்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான டோக்கன்களை ரேசன் கடை ஊழியா்கள் வீடுவீடாகச் சென்று திங்கள்கிழமை வழங்கினா். டோக்கன் பெற்ற அனைவருக்கும் வரும் 15 ஆம் தேதி முதல் தொடா்ந்து பணம் வழங்கப்படும் என வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT