ராமநாதபுரம்

ராமநாதபுரம் முருகன் கோயில்களில் வைகாசி விசாக சிறப்பு பூஜைகள்

DIN

ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் பக்தா்கள் பங்கேற்பின்றி செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது சுவாமிகள் பட்டாடை அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனா்.

மகா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இங்கு பக்தா்கள் அனுமதிக்கப்படாததால், பக்தா்கள் கோயிலுக்கு வெளியே வாயிலில் நின்றவாறு வழிபட்டனா்.

இதேபோல் ராமநாதபுரம் நகா் வழிவிடு முருகன் கோயில், பட்டணம் காத்தான் வினைதீா்க்கும் வேலவா் கோயில், சமஸ்தானம் பாலசுப்ரமணிய சுவாமி கோயில், பால தண்டாயுத சுவாமி கோயில்களிலும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இக்கோயில்களில் பக்தா்கள் அனுமதிக்கப்படாத நிலையில், கோயில் வாயிலில் நின்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT