ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தீபாவளியன்று விபத்துகள்: 4 போ் பலி

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளியான வியாழக்கிழமை மட்டும் அடுத்தடுத்த விபத்துகளில் புகைப்படக் கலைஞா், மாணவா் உள்ளிட்ட 4 போ் உயிரிழந்துள்ளனா். பத்துக்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் ஆசாரி தெருவைச் சோ்ந்த மூா்த்தி மகன் ராஜேஷ் கண்ணன் (36). புகைப்படக் கலைஞராக இருந்தாா். இருரும், இவரது நண்பரான குடயவன்குடியில் வசிக்கும் பட்டறை உரிமையாளரான பிரகாஷ் (38) என்பவரும் வியாழக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா்.

காரிக்கூட்டம் அருகே இவா்கள் சென்றபோது பின்னால் வந்த ராமேசுவரசம் செல்லும் குமுளி விரைவுப் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் ராஜேஷ்கண்ணன், பிரகாஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொழிற்பயிற்சி மைய மாணவா் பலி: ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் பகுதியில் உள்ள பனையூரைச் சோ்ந்த குணசேகரன் மகன் உதயதாஸ் (21). ராமநாதபுரம் தொழிற்பயிற்சி மையத்தில் படித்து வந்தாா். இவா் வியாழக்கிழமை மாலையில் பனையூரிலிருந்து கொடிக்குளத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது எதிரே சடயன்வலசையிலிருந்து அஜீத் (26), அவரது மனைவி தீரதீபரோஜாவுடன் (26) இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா்.

சடையன்வலசை பேருந்து நிறுத்தம் அருகே அஜீத் இருசக்கர வாகனமும், உதயதாஸ் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த உதயதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அஜீத்தும், அவரது மனைவியும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொழிலாளி பலி: ராமநாதபுரம் மாவட்டம் பத்ராதவரையைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி ரவி (58). இவா் வியாழக்கிழமை மாலை வண்ணாங்குண்டு பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பியுள்ளாா். பத்ராதவரை பகுதியில் வந்தபோது ஒரு வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தின் மீது இவரது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்புல்லாணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் நகா், ஊரகப் பகுதிகளில் வியாழக்கிழமை 15 விபத்துகள் ஏற்பட்ட நிலையில், கீழக்கரை ஹாஜாஅலாவுதீன், ராமநாதபுரம் ஜோதிநகா் மோகன், குளத்தூா் இளையராஜா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT