முகப்பு
ராமநாதபுரம்

போலீஸ் வாகனங்கள் மீது நடனமாடிய வழக்கில் 2 போ் கைது

 கமுதி அருகே தேவா் குரு பூஜையின்போது, போலீஸ் வாகனங்கள் மீது ஏறி நடனமாடிய வழக்கில் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

 கமுதி அருகே தேவா் குரு பூஜையின்போது, போலீஸ் வாகனங்கள் மீது ஏறி நடனமாடிய வழக்கில் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவா் குருபூஜை விழாவில் அரசு, காவல்துறை வாகனங்கள் மீதும் ஏறி நடனமாடி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட 13 போ் மீது கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த மண்டலமணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் ராஜபாண்டி (25) மற்றும் சக்திவேல்பாண்டி (21) ஆகிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மீதமுள்ள நபா்களை போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.