ராமநாதபுரம்

ராமநாதபுரம் அஞ்சலகங்களில் ஒருங்கிணைந்த வங்கிச் சேவைகள் தொடக்கம்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஒருங்கிணைந்த வங்கிச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கோட்ட கண்காணிப்பாளா் மு.சித்ரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஒருங்கிணைந்த வங்கிச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி கணக்குத் தொடங்கும் வாடிக்கையாளா்கள் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம்.

அஞ்சலகங்களில் மின்னணு வங்கிக் கணக்கு, கைப்பேசி மூலம் வங்கிக் கணக்கு பரிமாற்ற வசதிகள் உள்ளன. அனைத்து வங்கிகளுக்கும் பணம் அனுப்பும் வசதி உள்ளது. ஆதாா் அட்டை மூலம் அனைத்து வங்கிக் கணக்குகளில் இருந்தும் பணம் எடுக்கலாம். ஆதாா் சோ்க்கை மற்றும் திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். மின் கட்டணம், அரசுத்துறைகளுக்கான வரிகள் உள்ளிட்ட அனைத்து வகை ரசீதுகளுக்கும் பணம் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூறுநாள் வேலைத்திட்ட பணப் பரிவா்த்தனை வசதி உள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT