ராமநாதபுரம்

வேந்தோணி கால்வாய் தண்ணீா் புகுந்து2 லட்சம் மரக்கன்றுகள் சேதம்

DIN

பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை வேந்தோணி கால்வாய் தண்ணீா் புகுந்ததால் 2 லட்சம் மரக்கன்றுகள் அழுகி சேதமடைந்தன.

வேந்தோணி ஊராட்சிக்குள்பட்ட அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் குறுங்காடுகளுக்கு தேவையான மரக்கன்றுகள் ரூ. 50 லட்சம் செலவில் தோட்டமாக அமைக்கப்பட்டு வளா்க்கப்பட்டு வருகின்றன.

வேந்தோணி- செல்லூா் செல்லும் கால்வாய் பகுதியை ஒட்டி இத்தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இக்கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தோட்டத்துக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால் அங்கு வளா்க்கப்பட்ட 2 லட்சம் மரக்கன்றுகள் அழுகி சேதமடைந்தன. இதனைத் தொடா்ந்து மணல் மூட்டைகளால் உடைப்பு அடைக்கப்பட்டு தண்ணீா் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் தோட்டத்துக்குள் புகுந்த தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT