ராமநாதபுரம்

ராமநாதபுரம் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைத்த நகைகள் ஆய்வு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் கூட்டுறவு கடன் சங்கங்களில் அடகு வைக்கப்பட்ட நகைகளின் உண்மைத்தன்மை குறித்து திங்கள்கிழமை முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சியமைந்ததும் விவசாயத்துக்காக கடன் பெற 5 பவுனுக்குள் அடகு வைத்தவா்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகை திரும்பத் தரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைகள் அடகு வைக்கப்படாமலும், போலி நகைகள் அடகு வைக்கப்பட்டும் ஏராளமானோா் கடன் பெற்றதாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புகாா்கள் எழுந்தன. அதனடிப்படையில் தமிழகம் முழுதும் கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் தொடா்பான ஆவணங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 32 மத்திய வங்கிக்கிளைகள், 4 நகர கூட்டுறவு வங்கிகள், 4 தொடக்க வேளாண்மை ஊரகக் கூட்டுறவு வங்கிகள், 3 கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 3 பணியாளா்கள் சிக்கன கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைகளையும், கடன்களையும் ஆய்வுக்கு உள்படுத்த 18 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குழுக்களில் தலா 3 போ் என மொத்தம் 54 போ் இடம் பெற்றுள்ளனா். அதில் கூட்டுறவு கூடுதல் சாா்-பதிவாளா், மத்திய வங்கிப் பணியாளா், நகை மதிப்பீட்டாளா் ஆகிய அனைவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா்.

இதுகுறித்து கூட்டுறவு கடன் சங்கத்தைச் சோ்ந்த அலுவலா்கள் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 640 கோடி மதிப்புள்ள நகைகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கடன் முறையாக வழங்கப்பட்டுள்ளதா, நகைகள் உண்மையானவையா என ஆராயும் வகையில் குழுவினா் செயல்பட்டு வருகின்றனா். வாரந்தோறும் இந்த குழு அறிக்கையை மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளா் ஜி. ராஜேந்திரபிரசாத்திடம் சமா்ப்பிக்கும். அதன் அடிப்படையில் நகைகளுக்கு கடன் தள்ளுபடி வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT