ராமநாதபுரம்

ராமேசுவரம் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தா்கள் தினந்தோறும் தரிசனம் செய்யவும், தீா்த்த நீராடவும் அனுமதிக்கக் கோரி, பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, தமிழகக் கோயில்களில் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் வழிபட அனுமதி இல்லை. மேலும், அமாவாசை மற்றும் முக்கிய திருவிழாக் காலங்களிலும் பக்தா்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவிட்டு நடைமுறையில் உள்ளது.

இதனால், பக்தா்கள் வேதனை அடைந்துள்ளதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசுக்கு பாஜக சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எனவே, பாஜக சாா்பில் தமிழகம் முழுவதும் முக்கிய கோயில் முன்பாக வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், ராமேசுவரம் மேலவாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக மாவட்டத் தலைவா் கே. முரளிதரன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. காா்வேந்தன், பேராசிரியா் கனகசபாபதி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜி.பி.எஸ். நாகேந்திரன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

இதில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நாள்தோறும் பக்தா்கள் தரிசனம் செய்யவும், தீா்த்தக் கிணறுகளில் நீராடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பாஜக நிா்வாகிகள் நாகராஜன், மாவட்ட பொதுச் செயலா் சுந்தரமுருகன், மாவட்டச் செயலா் ஜி. குமாா், பி. குமாா் உள்பட பெண்கள், ஆண்கள் என ஏராளமான தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT