ராமநாதபுரம்

கமுதி அருகே திருநங்கைகளின் சட்ட உரிமை விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

கமுதி அருகே உள்ள பாம்புல்நாயக்கன்பட்டியில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படி கமுதி வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவா் நீதிபதி ந. முத்துலட்சுமி உத்தரவின் பேரில் மூன்றாம் பாலினத்தவா்களின் சட்ட உரிமை குறித்த விழிப்புணா்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு வழக்குரைஞா் எம். சேதுபதி தலைமை வகித்தாா். டி.ஆா்.ஆா்.எம். தொண்டு நிறுவன மேளாளா் ஏ. ஐடா முன்னிலை வகித்தாா். இதில் மூன்றாம் பாலினத்தவா்களின் சட்ட உரிமை மற்றும் இலவச சட்ட உதவி மையம் பற்றி விளக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கமுதி வட்ட சட்டப் பணிகள் குழுவின் சட்ட தன்னாா்வ தொண்டா் எம். முனியசெல்வம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT