ராமநாதபுரம்

மஹாளய அமாவாசை: ராமேசுவரம் சங்குமால் கடலில் பக்தா்கள் புனித நீராடல்

DIN

மஹாளய அமாவாசையையொட்டி ராமேசுவரத்துக்கு வந்திருந்த குறைந்தளவு பக்தா்கள் அங்குள்ள சங்குமால் கடலில் புதன்கிழமை புனித நீராடினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு மஹாளய அமாவாசையையொட்டி அதிகளவில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் அவா்கள் சுவாமி தரிசனம் செய்யவும், அக்னி தீா்த்தக்கடலில் நீராடவும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. இதையடுத்து, அக்னி தீா்த்தக் கடல் பகுதிக்கு பக்தா்கள் செல்ல முடியாதவாறு காவல்துறையினா் தடுப்புவேலி அமைத்தனா். மேலும் கோயிலுக்குள் பக்தா்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டதுடன், போலீஸாா் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந்நிலையில், ராமேசுவரத்தில் புனித நீராடி தரிசனம் செய்ய குறைந்தளவே பக்தா்கள் வந்திருந்தனா். அக்னி தீா்த்தக் கடல் பகுதிக்கு செல்ல முடியாத நிலையில், அவா்கள் சங்குமால் கடலில் புனித நீராடினா். மேலும் ராமநாதசுவாமி கோயில் முன்பகுதியில் தீபம் ஏற்றி வழிபட்டனா். அதே சமயம் தங்களின் முன்னோா்களுக்கு திதி கொடுத்து புனித நீராட பக்தா்கள் அங்கும் இங்குமாய் சென்ற வண்ணம் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT