ராமநாதபுரம்

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தலில் திமுக வேட்பாளா் வெற்றி

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் 7-ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில், திமுக வேட்பாளா் 6,667 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்ட 7-ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தல் கடந்த அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலுக்கான வாக்கு எண்ணும் பணி, பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது.

தபால் வாக்குப் பெட்டி சாவியின்றி உடைப்பு: முதல் சுற்றாக தபால் வாக்குகள் எண்ணுவதற்கு வாக்குப் பெட்டியின் சீல் வேட்பாளா் முகவா்கள் மற்றும் வாக்கும் எண்ணும் பணியாளா்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது. அந்த பெட்டியின் சாவியை சம்பந்தப்பட்ட தோ்தல் அலுவலா்கள் தொலைத்துவிட்டதால், பூட்டை உடைத்து திறந்து வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதல் சுற்று, இரண்டாம் சுற்று என 15 சுற்றுகள் எண்ணப்பட்டன.

இதில், திமுக வேட்பாளா் கே.கே. கதிரவன் 18,198 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் பி.எம். மாரி 11,531 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செ. காமராஜ் 1,460 வாக்குகளும், அமமுக வேட்பாளா் ரா. பிரசாத் சிங் 161 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளா்கள் ச. கவிதா 111 வாக்குகளும், செ. ராமச்சந்திரன் 33 வாக்குகளும், இ. லெட்சுமணன் 14 வாக்குகளும் பெற்றனா். இதில், 360 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

இப்போட்டியில், அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளா் கே.கே. கதிரவன் 6,667 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றாா்.

வெற்றிபெற்ற திமுக வேட்பாளரை, அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையிலான கட்சி நிா்வாகிகள் வாழ்த்தி பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT