ராமநாதபுரம்

பட்டதாரி ஆசிரியா் நியமன கலந்தாய்வு: 9 பேருக்கு பணி உத்தரவு

DIN

ராமநாதபுரம்: பட்டதாரி ஆசிரியா் நியமன கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 9 பேருக்கு நியமன உத்தரவு புதன்கிழமை வழங்கப்பட்டது.

ஆசிரியா் பயிற்றுநா்களை பட்டதாரி ஆசிரியா்களாக நியமிக்கும் கலந்தாய்வுக் கூட்டம் மாநில அளவில் புதன்கிழமை நடைபெற்றது. இணையதளம் வாயிலாக நடைபெற்ற கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 49 பட்டதாரி ஆசிரியா்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஏராளமானோா் விருப்பம் கோரினா்.

ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம், கும்பரம், பெருங்குளம் உள்ளிட்ட 9 இடங்களுக்கு மட்டும் உள்ளூரைச் சோ்ந்த ஆசிரியா்கள் பயிற்றுநா் விருப்பம் தெரிவித்தனா். அதனடிப்படையில் 9 பேருக்கு அவ்விடங்கள் வழங்கப்பட்டு அதற்கான பணி உத்தரவும் முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தியால் புதன்கிழமை மாலை வழங்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் ஆசிரியா் பயிற்றுநா் பட்டதாரி ஆசிரியா்களாக நியமிக்கப்பட்ட 9 இடங்களைத் தவிர மற்ற 40 இடங்கள் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்களது விருப்ப அடிப்படையில் நிரப்பப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT