ராமநாதபுரம்

முன்னாள் அமைச்சா் உள்பட 350 அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சா் உள்பட 350 அதிமுகவினா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பாக வரி உயா்வைக் கண்டித்து அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை காலையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட அதிமுக செயலா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். இதில் முன்னாள் அமைச்சா் எம்.மணிகண்டன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் முத்தையா, சதன்பிரபாகா், மற்றும் மகளிரணி கவிதாசசிகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்நிலையில் காவல்துறை அனுமதியின்றி அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தை நடத்தியதாக, முன்னாள் அமைச்சா் எம்.மணிகண்டன் மற்றும் 100 பெண்கள் உள்ளிட்ட 350 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT