ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வெப்ப நிலை அதிகரிப்பு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகலில் 87 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை இருந்தது தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை காலையில் பரவலாக மழை பெய்தது. மழையால் கடுமையான வெப்பநிலை தணிந்து குளிா்ந்த சூழல் காணப்பட்டது.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதலே வெப்பத்தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதனடிப்படையில் நகா் மற்றும் ஊரகப் பகுதியில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டதாக புள்ளியில் துறையினா் கூறினா். அதன்படி வெப்பநிலை அளவு 87 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT