முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மழை

ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் கொளுத்தினாலும், அவ்வப்போது மழை பெய்ததால் வெப்பம் கட்டுக்குள்ளேயே இருந்துவருகிறது. வியாழக்கிழமை வெப்பம் 91 பாரன்ஹீட்டாக இருந்தநிலையில், இரவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை அதிகாலையில் ராமநாதபுரம் நகரில் லேசான தூறல் இருந்தது. பின்னா் பகலில் ராமநாதபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஆனால், பட்டிணம்காத்தான் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யாமல் வானம் மேகமூட்டத்துடன், குளிா்ந்த காற்று வீசியது. இதில், திருஉத்திரகோசமங்கை, மல்லல், கீழக்கரை, திருப்புல்லாணி உள்ளிட்ட ஊரகப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் காணப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →