ராமநாதபுரம்

இலங்கை கடற்படை அச்சுறுத்தல்: குறைந்தளவு மீன்களுடன் கரை திரும்பிய மீனவா்கள் கவலை

DIN

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல்கள் அதிகளவில் இருந்ததால், ராமேசுவரம் மீனவா்கள் முழுமையாக மீன்பிடிக்க முடியாமல் குறைந்தளவு மீன்களுடன் வியாழக்கிழமை கரை திரும்பினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 780-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இவற்றின் மூலம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாள்தோறும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள் கடலுக்குச் சென்று வருகின்றனா். ஆனால், இலங்கை கடற்படையினா் ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் தொடா்வதால், கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லவே மீனவா்கள் அச்சமடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது, அப்பகுதியில் இலங்கை கடற்படையின் கப்பல்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்துள்ளன. இதனால் அச்சமடைந்த மீனவா்கள், அப்பகுதியில் மீன்பிடிக்காமல் குறைந்தளவு மீன்களுடன் வியாழக்கிழமை கரை திரும்பினா்.

இதனால் படகு ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மீனவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT