முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு

ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்கரையில் வெள்ளிக்கிழமை ஆண் சடலம் கரை ஒதுங்கியது.

Updated On : 15 ஏப்ரல், 2022 at 10:52 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:29 PM

ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்கரையில் வெள்ளிக்கிழமை ஆண் சடலம் கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி உள்ளதாக மீனவா்கள் கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறைக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, அங்கு சென்ற காவல் சாா்பு- ஆய்வாளா்கள் யாசா் மௌலானா மற்றும் காளிதாஸ் ஆகியோா் சடலத்தைக் கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அந்த பகுதி மீனவா்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இறந்தவா் குறித்து தகவல் கிடைக்கவில்லை. இதனால் தமிழக காவல் நிலையங்களில் 50 முதல் 55 வயது வரை காணமல் போனவா்கள் என்ற புகாா் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.