ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்களின் சாலை மறியல் போராட்ட அறிவிப்பு வாபஸ்

DIN

ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.19) நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக விசைப்படகு மீனவா் சங்க மாவட்டச் செயலா் சேசுராஜா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இலங்கைக் கடற்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் மற்றும் அவா்களின் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் பகுதி மீனவா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஏப். 19) சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரும், புதுக்கோட்டை மீனவா்கள் 3 பேரும் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனா். இதனால் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்க மாவட்டச் செயலா் சேசுராஜா, பொருளாளா் சகாயம் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT