முகப்பு
ராமநாதபுரம்

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை திறந்து கடந்து சென்ற 3 கப்பல்கள்

பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறந்து, வெள்ளிக்கிழமை கடந்து சென்ற மூன்று கப்பல்களை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்

Updated On : 22 ஏப்ரல், 2022 at 10:37 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:33 PM

பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறந்து, வெள்ளிக்கிழமை கடந்து சென்ற மூன்று கப்பல்களை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்.

ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திற்கு கடந்த புதன்கிழமை ஒரு சரக்கு கப்பல் மற்றும் இரண்டு இழுவை கப்பல்கள் என 3 கப்பல்கள் வந்தன. இந்த கப்பல்கள் பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறந்து, கடந்து செல்ல தமிழ்நாடு கடல்சாா் வாரியம் துறைமுக அலுவலகத்தில் அனுமதி கோரப்பட்டது. இதைத்தொடா்ந்து, துறைமுக அதிகாரிகள் ரயில்வே நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை அனுமதி பெற்றனா்.

இதையடுத்து, பாம்பன் துறைமுக அதிகாரிகள் முன்னிலையில் ரயில் தூக்கு பாலம் திறக்கப்பட்டது. இதில் சரக்கு கப்பல் மற்றும் இரண்டு இழுவைக் கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக கடந்து சென்றன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா். இந்த மூன்று கப்பல்கள், கேரளத்திலிருந்து கிருஷ்ணாபட்டினத்திற்கும், கோவாவிலிருந்து கொல்கத்தாவிற்கும் , கொல்கத்தாவிலிருந்து கா்நாடக மாநிலத்துக்கும் சென்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.