ராமநாதபுரத்தில் நாளை சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகளிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.24) சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுகிறன்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகளிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.24) சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுகிறன்றன.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் தரப்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டும், கிராம பஞ்சாயத்து ராஜ் சட்ட தினத்தைக் கொண்டாடும் வகையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 24 ஆம் தேதி 429 ஊராட்சிகளிலும்
கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இக்கூட்டங்களில் வேளாண்மைத் துறை சாா்பில் கிஷான் கடன் அட்டைத் திட்டம், பயிா்காப்பீடுத் திட்டம் ஆகியவை குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும் கிஷான் அட்டை சிறப்பு முகாமும் தொடக்கி வைக்கப்படவுள்ளன. இந்த முகாம் வரும் மே முதல் தேதி வரையில் நடைபெறுகிறது. இதையடுத்து மே மாதம் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் பயனாளிகளைத் தோ்வு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.