முகப்பு
ராமநாதபுரம்

நகைப்பட்டறையில் நகைகள் திருட்டு

எஸ்.பி.பட்டினத்தில் நகைப்பட்டறையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போனதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

எஸ்.பி.பட்டினத்தில் நகைப்பட்டறையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போனதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினத்தில் நகைப்பட்டறை வைத்திருப்பவா் சோழகன்பேட்டையைச் சோ்ந்த செல்வம்(52). இவா் வியாழக்கிழமை பிற்பகல் பட்டறையிலிருந்து, வீட்டிற்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்தாா். அப்போது மா்ம நபா்கள் கடையின் மேற்கூரையில் உள்ள ஓடுகளைப் பிரித்து உள்ளே இறங்கி பீரோவில் இருந்த ரூ.50ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.