ராமநாதபுரம்

தொண்டி அருகே இலங்கை அகதிகள் 2 பேர் வருகை: கடலோர காவல்துறையினர் விசாரணை

திருவாடானை அருகே தொண்டி கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை இலங்கையை சேர்ந்த 2 இளைஞர்கள் ஒரு படகில் வந்தனர்.

DIN

திருவாடானை: திருவாடானை அருகே தொண்டி கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை இலங்கையை சேர்ந்த 2 இளைஞர்கள் ஒரு படகில் வந்தனர். அவர்களை கடலோர காவல்துறையினர் விசாரணைக்காக மண்டபம் முகாமிற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடல் வழியாக  இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் சீலன் (27) மற்றும் எட்வர்ட் மகன் அருள்ராஜ் (34) ஆகிய  2 பேர்  இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சிறிய வகை விசைப்படகில் தொண்டி வந்தடைந்தனர். 

அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுடன் குயின்சி ராணி என்று பெயரிடப்பட்ட படகில் வந்த இருவரும் படகுக்கான ஆவணங்கள் மட்டுமே கொண்டுவந்துள்ளனர். அவர்கள் கடல்வழியாக வரும் போது அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் இது எந்த ஊர்? அருகே காவல் நிலையம் உள்ளதா? என்ற விபரங்களை கேட்டறிந்து தொண்டியில் கடற்கரை எதிரே உள்ள கடற்கரை காவல் நிலையம் வந்தடைந்தனர். 

அவர்களை கப்பற்படை காவல் துணை ஆய்வாளர் ராஜ்குமார் விசாரணை செய்து மண்டபம் அகதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT