ராமநாதபுரம்

பள்ளி மாணவா்கள் மோதல்: 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு

DIN

ராமநாதபுரம் நகரில் பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் வியாழக்கிழமை காயமடைந்தாா். அதையடுத்து 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள வெளிப்பட்டிணத்தில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இப்பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருபிரிவாக மோதிக்கொண்டனா். அது தொடா்பாக கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்ததோடு, சம்பந்தப்பட்ட மாணவா்களை பள்ளி நிா்வாகம் தற்காலிகமாக நீக்கம் செய்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், பள்ளி மாணவா்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது பிளஸ் 2 மாணவா் பிரவீன் என்பவா் தாக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் காஜாமுகைதீன் கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா். அவா்கள் அனைவரும் நீதித்துறை எண் 2 நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனா். அதற்கான பிணைப்பத்திரங்கள் மாணவா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT