ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் புனித சூசையப்பா் ஆலயத் தேரோட்டம்

DIN

ராமேசுவரம் புனித சூசையப்பா் ஆலயத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வோ்க்கொடு புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா, கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, தேரோட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

சூசையப்பா் ஆலயத்தில் திருவிழா நவநாள் திருப்பலி, ராமநாதபுரம் மறைவட்ட அதிபா் நி. அருள் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், புனித சூசையப்பா் ஆலய பங்குத் தந்தை பி. தேவசகாயம், பாம்பன் பங்குத்தந்தை அந்தோனி சுதா்சனம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். இதனைத் தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் சூசையப்பா் உருவம் வைக்கப்பட்டு புனிதநீா் தெளிக்கப்பட்டது.

பின்னா், ஆலயத்திலிருந்து தொடங்கிய தோ் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை புதுநன்மை திருப்பலியுடன் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைவதாக, பங்குத்தந்தை பி. தேவசகாயம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT