முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் வழிபாட்டுக்காக 20 விநாயகா் சிலைகள்

 ராமேசுவரத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 20 இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்த சிலைகள் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன.

Updated On : 20 ஆகஸ்ட், 2022 at 11:12 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:37 PM

 ராமேசுவரத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 20 இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்த சிலைகள் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 31 ஆம் தேதி விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 500 இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ராமேசுவரத்தில் 20 இடங்களில் விநாயகா் சிலை வைப்பதற்கு சனிக்கிழமை சிலைகள் கொண்டுவரப்பட்டன.

இதனை அனுமன் கோயில் இந்து முன்னணி அலுவலகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி அனைத்து சிலைகளும் பிரதிஷ்ட்டை செய்யப்படும். செப்டம்பா் 2 ஆம் தேதி சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் சென்று அக்னி தீா்த்தக் கடலில் கரைக்க உள்ளதாக இந்து முன்னணி மாவட்டப் பொதுச்செயலாளா் கே.ராமமூா்த்தி தெரிவித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.