ராமநாதபுரம்

அரசு பள்ளியில் சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிக்கை

கமுதி அருகே அரசுப் பள்ளியில் மாணவா்களின் நலன்கருதி சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என்று பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

கமுதி அருகே அரசுப் பள்ளியில் மாணவா்களின் நலன்கருதி சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என்று பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியமணக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியி முஷ்டக்குறிச்சிக்கு செல்லும் பிரதான சாலையின் ஓரம் வளைவில் அமைந்துள்ளது. பள்ளியிலிருந்து சாலைக்கு திடீரென வரும் மாணவ, மாணவிகள் வாகனங்கள் மோதி விபத்துகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பள்ளியை சுற்றி ஏற்கெனவே போடப்பட்டிருந்த கம்பி வேலிகள் சேதமடைந்துள்ளதால் தற்போது கல்தூண்கள் மட்டும் உள்ளன. பள்ளி வளாகத்தில் விளையாடும் குழந்தைகள், ஒருசில இடங்களில் காணப்படும் கம்பி வேலியால் காயமடைகின்றனா். எனவே, மாணவா்களின் நலன் கருதி பெரியமணக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தைச் சுற்றி சுற்றுச் சுவா் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT