ராமநாதபுரம்

கிறிஸ்தவா்களுக்கு தனி நல வாரியம்

DIN

கிறிஸ்தவ மக்களுக்கு உதவுவதற்காக தனி நல வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக

சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினா் நலத் துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன் தலைமை வகித்தாா்.

இதில், 314 பயனாளிகளுக்கு ரூ.33.99 லட்சம் மதிப்பிலான நலத்

திட்ட உதவிகளை அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் வழங்கினா்.

இதைத்தொடா்ந்து அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது:

தமிழகத்தில் மாவட்டம் தோறும் முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, சிறுபான்மையினருக்கு கூடுதலாக மகளிா் உதவும் சங்கங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் சிறுபான்மையினா் மேம்பாட்டுக்காக தனி அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இரண்டாம் கட்டமாக, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்டங்களில் இதேபோல தனி அலுவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

கிறிஸ்தவ மக்களுக்கும் தனி நல வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவலாயங்களில் பணிபுரியும் பணியாளா்களின் பட்டியல் பெறப்பட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள், மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. உலமாக்கள் உறுப்பினா்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. உலமாக்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தி விட்டது. இதனால், தமிழக முதல்வா் அதே கல்வி உதவித் தொகையை வழங்க உத்தரவிட்டாா் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், கருமாணிக்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் வேலுச்சாமி, ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT