கமுதி அருகே கண்மாயில் மணல் திருட்டு: ஒருவா் கைது
கமுதி அருகே அனுமதியின்றி கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்டவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கமுதி அருகே அனுமதியின்றி கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்டவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள முஷ்டக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமையா மகன் மாரி(40). இவா் முஷ்டக்குறிச்சி கண்மாயில் எவ்வித ஆவணமும் இன்றி, மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட மாரியை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனா்.