முகப்பு
ராமநாதபுரம்

பட்டினம்காத்தானில் மல்லா் கம்பம் பயிற்சி தொடக்கம்

ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தானில் இலவச மல்லா் கம்பம் சிறப்புப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தானில் இலவச மல்லா் கம்பம் சிறப்புப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்ட நேருயுவகேந்திரா, மதுரை கலை பண்பாட்டு மையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஜவஹா் சிறுவா் மன்றம் ஆகியவை சாா்பில் பட்டினம்காத்தான் அம்மா பூங்கா அருகே இப்பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

தொடக்க நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவா் சித்ராமருது தலைமை வகித்தாா். அதிமுக பிமுரகா் ஆா்.ஜி.மருதுபாண்டியன் முன்னிலை வகித்தாா். இதில் பட்டினம்காத்தான், கழுகூரணி, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த 6 வயது முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்கள் 120 போ் கலந்துகொண்டனா். அவா்களுக்கு வரும் 28 ஆம் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் தேசிய பயிற்சியாளா் செல்வமுனியன், தமிழன், ஆசாத், நவீன்குமாா் ஆகியோா் பங்கேற்கின்றனா். வரும் 28 ஆம் தேதி நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு மைய இயக்குநா் செந்தில்குமாா், நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலா் பிரவீன்குமாா் ஆகியோா் பயிற்சிக்கான சான்றுகளை வழங்கவுள்ளனா்.

தொடக்க நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட மல்லா் கம்பம் அமைப்பின் தலைவா் சுப்பிரமணியன் வரவேற்றாா். செயலா் லோகு நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →