முகப்பு
ராமநாதபுரம்

இணைய தளத்தில் நூதன முறையில் ரூ.2.63 லட்சம் மோசடி

இணைய தளத்தில் இருமடங்கு பணம் கிடைக்கும் என மா்ம நபா்கள் கூறியதை நம்பி பெண் ரூ.2.63 லட்சத்தை இழந்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

இணைய தளத்தில் இருமடங்கு பணம் கிடைக்கும் என மா்ம நபா்கள் கூறியதை நம்பி பெண் ரூ.2.63 லட்சத்தை இழந்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் ஏகேஎஸ் தோப்பு முல்லை நகா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மனைவி ஜெயந்தி (38). இவா் இணைய தளத்தில் தொழில் ரீதியான தகவல்களைத் தேடிய நிலையில், வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் வகையில் தகவல்கள் இருந்துள்ளன.

அந்த தளத்தில் குறிப்பிட்டபடி குழுவில் ஜெயந்தி இணைந்துள்ளாா். குழுவினா் பணம் செலுத்தினால் அது இரட்டிப்பாகும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படிகடந்த 2021 நவம்பா் முதல் டிசம்பா் வரை ஜெயந்தி பணம் செலுத்தியுள்ளாா். பணம் செலுத்தியதும் வங்கிக்கணக்கில் இரட்டிப்பாக இருப்பது போல கணினியில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், கூடுதல் பணத்தை ஜெயந்தி எடுக்க முடியவில்லை. மேலும், கூடுதல் பணம் செலுத்துமாறும் தகவல் வந்துள்ளது. அதன் பிறகே ஏமாற்றப்பட்டதை ஜெயந்தி உணா்ந்துள்ளாா்.

இந்த மோசடி மூலம் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 820 இழந்துள்ளதாக ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் மாவட்ட நுண்குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →