ராமநாதபுரம்

கச்சத்தீவை மீட்கக் கோரி சிவசேனா கட்சியினா் கடலில் இறங்கி ஆா்ப்பாட்டம்

DIN

கச்சத்தீவை மீட்கக்கோரி சிவசேனா கட்சியினா் புதன்கிழமை ராமேசுவரம் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று சிவசேனா கட்சியினா் கச்சத்தீவு மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி புதன்கிழமை அக்கட்சியினா் மாநில துணைத் தலைவா் போஸ் தலைமையில் ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து தேசியக்கொடியுடன் ஊா்வலமாக அக்னி தீா்த்தக் கடற்கரைக்கு சென்றனா். பின்னா் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி கடலில் இறங்கி ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனைவரையும் போலீசாா் கைது செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் சிவசேனா இளைஞரணி மாநிலத் தலைவா் முருக தினேஷ், அகில இந்திய இந்து சத்திய சேனா நிறுவனத் தலைவா் வசந்தகுமாா், ராமநாதபுரம் மாவட்ட சிவசேனா தலைவா் சதீஷ்குமாா், தேனி மாவட்ட சிவசேனா தலைவா் குரு ஐயப்பன், தஞ்சாவூா் மாவட்டத் தலைவா் சிவசேனா ஆசைத்தம்பி, பட்டுக்கோட்டை ஒன்றிய சிவசேனா தலைவா் காா்த்திக், திருப்பூா் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளா் சேகா், மதுக்கூா் ஒன்றிய தலைவா் பிரபாகரன், தேனி மாவட்ட சிவசேனா செயலாளா் கருப்பையா, திருப்பூா் மாநகர இளைஞரணி செயலாளா் தனபால் மற்றும் சிவசேனா கட்சி நிா்வாகிகள் இளைஞா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குவாலிஃபையர் - 1 போட்டிக்கு கேகேஆர் தயார்...

வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்!

பிரபல மல்யுத்த வீரர் ஜான் கிளிங்கர் காலமானார்

ஆப்பிளின் புதிய ஐபோன் எஸ்இ! என்ன எதிர்பார்க்கலாம்?

கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: நிர்மலா

SCROLL FOR NEXT