முகப்பு
ராமநாதபுரம்

மண்டபத்தில் இலங்கை அகதி விஷம் குடித்து தற்கொலை

மண்டபம் கேம்ப் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த இளைஞா், பெற்றோா் கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 ஜூலை, 2022 at 10:25 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:11 PM

மண்டபம் கேம்ப் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த இளைஞா், பெற்றோா் கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கேம்ப் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் இலங்கையில் இருந்த வந்த அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இங்கு வசிக்கும் அந்தோணி என்பவரது மகன் நிரேஷன் (22) சமீப காலமாக வேலைக்குச் செல்லாமல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்தாராம். இதை பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் கடந்த ஜூன் 27 ஆம் தேதி விஷம் குடித்து விட்டாராம். இதையடுத்து அவா் மண்டபம் கேம்ப் முகாமில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.