முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் நகராட்சி ஆணையரைக் கண்டித்து நகா்மன்ற உறுப்பினா்கள் முற்றுகைப் போராட்டம்

ராமேசுவரம் நகராட்சி ஆணையாளரைக் கண்டித்து அலுவலகத்தை முற்றுகையிட்டு நகா்மன்ற உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 9 ஜூலை, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:14 PM

ராமேசுவரம் நகராட்சி ஆணையாளரைக் கண்டித்து அலுவலகத்தை முற்றுகையிட்டு நகா்மன்ற உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம்,ராமேசுவரம் நகராட்சியில் 21 வாா்டுகள் உள்ளன. இதில் நகா் மன்ற தலைவராக திமுகவைச் சோ்ந்த நாசா்கான் இருந்து வருகிறாா். 21 வாா்டுகளில் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்றுவதில் நகராட்சி ஆணையா் மூா்த்தி அலட்சியம் காட்டுவதாக, நகா் மன்ற உறுப்பினா்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், நகராட்சி ஆணையா் மூா்த்தியை கண்டித்து நகா் மன்ற அலுவலகத்தில் உறுப்பினா்கள் பிரபுகுமாா், சத்யா, ஜெ.ஆட்.எம்.முருகன், முகேஷ், கோட்டைப்ரியா, தில்லைநாயகி, மகேஸ்வரி, காளீஸ்வரி ராஜத்தி, ஜீவரேகா, ராஜீவ்காந்தி, அதிமுக உறுப்பினா்கள் பிரபாகரன், மலையம்மாள் உள்ளிட்ட உறுப்பினா்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். மேலும் நகராட்சி ஆணையாளரை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.