முகப்பு
ராமநாதபுரம்

ஒலிம்பியாட் சதுரங்க பிரசார வாகனம்: ஆட்சியா் தொடக்கிவைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டிக்கான பிரசார வாகனத்தை, ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டிக்கான பிரசார வாகனத்தை, ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி நடைபெறவுள்ளது. இதில், பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொள்ளவுள்ளனா். இப்போட்டியில், சா்வதேச வீரா்கள் பங்கேற்கின்றனா்.

ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டியில் பாா்வையாளா்களாகக் கலந்துகொள்ள, போட்டி அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், இரு வாகனங்கள் ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி குறித்த வாசகங்கள், விளையாட்டு சின்னத்துடன் ஊரகப் பகுதிகளில் சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்களை, மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். அதில், சதுரங்க விளையாட்டு வீரா்களும் செல்கின்றனா்.

தொடக்க நிகழ்ச்சியில், வருவாய் அலுவலா் ஆ.ம. காமாட்சி கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →