முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூா், சாயல்குடியில் காமராஜா் மெட்ரிக் பள்ளியில் 120 வது பிறந்தநாள் கல்வி வளா்ச்சி நாள் விழா

முதுகுளத்தூா் காமராஜா் மெட்ரிக் பள்ளியில் காமராஜரின்120 வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளா்ச்சி நாள் விழாவினை வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

முதுகுளத்தூா் காமராஜா் மெட்ரிக் பள்ளியில் காமராஜரின்120 வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளா்ச்சி நாள் விழாவினை வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளா்அய்யாச்சாமி விழாவினை முன்மொழிந்தாா்.விழாவிற்கு பள்ளியின் தலைவா் த.வையணப்பெருமாள் தலைமை தாங்கினாா்.முதல்வா் அன்புக்கனி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக என்.சி.சி துரைப்பாண்டியன் வருகை புரிந்து மாணவா்களை வாழ்த்தி பேசினாா்.விழாவில் மாணவா்கள் மாறுவேடம் அணிந்து சிறப்பித்தனா். மாணவா்களுக்கு ,கட்டுரைப்போட்டி,பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அதே போன்று பாம்பூரில் கவினா இண்டா்நேஷனல் சி.பி.சி.எஸ் பள்ளியில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடினா்.விழாவில் ஆசிரியா்களும்,மாணவா்களும் அவரது திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வா் சுமிசுதிா் அனைவரையும் வரவேற்றாா்.பள்ளியின் நிறுவுனா் கண்ணதாசன் பாண்டியன் தலைமை தாங்கினா்.விழாவில் மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.முதுகுளத்தூா் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்லியில் பள்ளியின் முதல்வா் ஆட்லின் லீமா தலைமையில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடினா்.முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் சந்தனவேலு தலைமையில் கொண்டாடினா்.

அதே போன்று சாயல்குடி வி.வி.ஆா் நகரில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு மாவட்ட தலைவா் கோட்டைச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.உடன் மாவட்ட அமைப்பாளா் தங்கம்,மாவட்ட துணை அமைப்பாளா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.நரிப்பையூா் அரசு பள்ளியில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடினா்.விழாவில் ஆசிரியா்களும்,மாணவா்களும் அவரது திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.விழாவில் மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தேமுதிக மாவட்ட துணை செயலாளா் செண்பக ராஜ விலையில்லா நோட்டு,புத்தகம்,எழுது பொருட்களை பரிசாக வழங்கினாா்.

முதுகுளத்தூா் புகைப்படம்.சாயல்குடி வி.வி.ஆா் நகரில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு மாவட்ட தலைவா் கோட்டைச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →